அமெரிக்காவில் எச்-1பி விசா வைத்திருப்பவர்களின் மனைவிகளுக்கு ஒர்க் பெர்மிட் வழங்குவது தொடர வேண்டும் : அரசிடம் 130 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேண்டுகோள்

May 18 2018 12:06PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவில் எச்-1பி விசா வைத்திருப்பவர்களின் மனைவிகளுக்கு ஒர்க் பெர்மிட் எனும் பணி அனுமதி வழங்குவது தொடர வேண்டும் என அந்நாட்டு அரசிடம், 130 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அமெரிக்காவில் கடந்த 2015-ம் ஆண்டு ஒபாமா அதிபராக இருந்தபோது அங்கு குடியுரிமை பெற்றால் எச்-1 பி விசாவில் தங்கி பணிபுரிபவர்களின் மமனைவிகளுக்கும் 'எச்-4' விசா அளித்து, வேலை பார்க்கும் வாய்ப்பினை வழங்கும் திட்டத்தை அமல்படுத்தினார். இதனால் 'எச்-1' பி விசாவில் அங்கு வேலை பார்க்கிற ஆண்களின் மனைவிகளும், பெண்களின் கணவர்களும் வேலை வாய்ப்பினை பெற்று குடும்பத்துடன் வாழ வழி வகுத்தது. இதனால் சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான எச்-4 விசாதாரர்கள் பலன் அடைந்தனர். இதில் பெரும்பாலோனர் இந்தியர்கள்.

ஆனால் டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபராக பதிவியேற்ற பின், அமெரிக்கர்கள் அமெரிக்க பொருட்களையே வாங்க வேண்டும், அமெரிக்க நிறுவனங்கள் அமெரிக்கர்களையே பணியில் அமர்த்த வேண்டும் என்ற கொள்கையை அறிமுகம் செய்து, அதை தீவிரமாக வலியுறுத்தி வருகிறார்.

அதன்படி, எச்-1 பி விசாவில் தங்கி வேலை செய்வோரின் மனைவி மற்றும் கணவருக்‍கான எச்-4 விசாவை ரத்து செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் நாடு திரும்ப வேண்டிய நிலையை உருவாக்கி உள்ளது. இது அமெரிக்காவை ஆளும் குடியரசு கட்சி மற்றும் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி எம்.பி.க்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

எனவே, அதிபர் டிரம்ப் இதுபோன்ற முடிவுகளை அவசரமாக எடுக்கக்கூடாது என்றும், எச்-4 விசாவை ரத்து செய்தால் அமெரிக்காவின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் கூறி, அந்நாட்டு அரசிடம், 130 எம்.பி.க்கள் எச்-4 விசா தொடர வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00