காங்கோவில் வேகமாக பரவி வரும் எபோலா நோய் : சோதனை முறையில் தயாரிக்கப்பட்ட தடுப்பு மருந்தை உலக சுகாதார நிறுவனம் அனுப்பி வைத்துள்ளது

May 18 2018 12:12PM
எழுத்தின் அளவு: அ + அ -

காங்கோவில், எபோலா நோய் வேகமாக பரவி வருவதை அடுத்து, சோதனை முறையில் தயாரிக்கப்பட்ட தடுப்பு மருந்தை உலக சுகாதார நிறுவனம் அந்நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளது.

விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவக்கூடிய எபோலா வைரஸ் நோய், முதலில் 2013-ம் ஆண்டு, ஆப்பிரிக்க நாடுகளில் பரவியது. 2016-ம் ஆண்டு வரை இந்த வைரஸ் நோய்க்கு 11 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகினர். எபோலா வைரஸ் நோய் தாக்கியவர்களுக்கு சிகிச்சை அளித்த செவிலியர்களும் பாதிக்கப்பட்டனர்.

தற்போது மீண்டும் காங்கோ நாட்டில் இந்த வைரஸ் நோய் பரவத்தொடங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அங்குள்ள Mbandaka நகரில் இந்த நோய் பரவி வருவதாகவும், இந்த நோயால் கடந்த சில தினங்களில் மட்டும் 23 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. மேலும் 52 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் காங்கோ நாட்டிற்கு ஜெனீவாவில் உள்ள உலக சுகாதார நிறுவனத்தின் தலைமையகத்தில் இருந்து முதல் கட்டமாக அனுப்பப்பட்ட 4 ஆயிரம் பேருக்கான மருந்துகள் அனுப்பப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எபோலா உயிர்க் கொல்லி நோய்க்கு இதுவரை அங்கீகரிக்கப்பட்ட தடுப்பு மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00