கம்போடியாவில் சிறப்பாக நடைபெற்று வரும் உலக தமிழர்கள் மாநாடு - காண்போரின் கண்களை கவர்ந்த பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள்

May 19 2018 7:15PM
எழுத்தின் அளவு: அ + அ -

உலகத் தமிழர்கள் மாநாடு கம்போடியா நாட்டில் இன்று தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது.

தமிழ் மற்றும் தமிழர்களின் பெருமையை உலகிற்கு எடுத்துரைக்கும் வண்ணம் நடைபெற்று வரும் இந்த மாநாட்டில், தமிழ்நாட்டு மட்டுமின்றி சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து, ஜப்பான், சீனா, மலேசியா, இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் வசிக்கும் தமிழர்கள், தமிழ் அறிஞர்கள், தமிழ் மொழியில் பல்வேறு துறை சார்ந்த தலை சிறந்த வல்லுநர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டுள்ளனர். உலகத் தமிழர்கள் மாநாட்டு குழு தலைவர் மரு.கா.திருத்தணிகாசலம் தலைமையில் நடைபெறும் மாநாட்டில், 8 புதிய தமிழ் புத்தகங்களின் வெளியீட்டு விழா நடைபெற்றது.

தொடக்க நாள் விழாவில், இலங்கை அமைச்சர் ராதாகிருஷ்ணன், கம்போடியா அரசின் மாநில செயலாளர் சாவ் சிவோன், கம்போடிய நாட்டு கல்வித்துறை துணை செயலளர் போசும் சேரி, மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் ஒரிசா பாலு, கம்போடியா தமிழ் பேரவை தலைவர் திரு. முத்தையா ராமசாமி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

மாநாட்டின் 2-வது நாளான நாளை, உலகளவில் தமிழர்களுக்கிடையேயான பண்பாடு, வணிக வர்த்தகத்தை மேம்படுத்துதல் ஆகியவை குறித்து கருத்தரங்கு நடைபெற உள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00