வடகொரியா-தென்கொரிய இடையே ராணுவ ரீதியிலான பேச்சுவார்த்தைக்‍கு மீண்டும் ஏற்பாடு - வரும் 14ம் தேதி இருநாடுகளின் தலைவர்களும் சந்தித்துப்பேச திட்டம்

Jun 3 2018 11:50AM
எழுத்தின் அளவு: அ + அ -

தென்கொரியா-வடகொரியா இடையே ராணுவ ரீதியிலான பேச்சுவார்த்தைக்‍கு மீண்டும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் 14ம் தேதி இவ்விரு நாடுகளின் தலைவர்களும் சந்தித்துப் பேசவுள்ளனர்.

வடகொரியாவின் அணு ஆயுத குவிப்பால கொரிய தீப கற்பத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. ஒன்றுக்கொன்று எதிரி நாடுகளாக இருக்‍கும் வடகொரியாவும், தென்கொரியாவும் அவ்வப்போது பேச்சுவார்த்தைக்‍கு முயன்ற போதிலும், ராணுவ குவிப்பால் அந்த முயற்சி வெற்றிபெறாமல் போனது. அமெரிக்‍காவின் தொடர் வற்புறுத்தலுக்‍குப் பிறகு அமைதிப் பேச்சுவார்த்தைக்‍கு தயாராக இருப்பதாக வடகொரியா அறிவித்தது. தனது அணு ஆயுத கூடங்களை அழிப்பதாக வடகொரியா அறிவித்ததையடுத்து, அந்நாட்டு தலைவர் கிம் ஜாங் உன், அமெரிக்‍க அதிபர் டிரம்ப் இடையே சிங்கப்பூரில் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக இருந்தது. ஆனால், திடீரென இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க வடகொரியா மறுத்ததால், அந்த முயற்சியும் தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில், வடகொரியா மற்றும் தென்கொரிய தலைவர்களிடையே ராணுவ ரீதியிலான பேச்சுவார்த்தைக்‍கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் முயற்சியாக வரும் 14ம் தேதி இந்த பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்‍கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் முக்‍கிய முடிவுகள் எடுக்‍கப்படலாம் என எதிர்பார்க்‍கப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00