பொலிவியாவில் அரசுக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற பேரணி வன்முறையால் போர்க்களமானது

Jun 8 2018 5:04PM
எழுத்தின் அளவு: அ + அ -

பொலிவியாவில் அரசுக்கு எதிராக ஆயிரக்‍கணக்‍கானோர் பங்கேற்று நடத்திய பேரணியில் பயங்கர வன்முறை வெடித்தது.

தென் அமெரிக்‍க நாடுகளில் ஒன்றான பொலிவியாவில், கல்வித்துறை கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது. பல பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்கள் ஊதியமின்றி பணியாற்றி வருகின்றனர். இதற்கு கண்டனம் தெரிவித்தும், அரசை கண்டித்தும் பல்வேறு இடங்களில் நாளுக்‍கு நாள் போராட்டம் வலுத்து வருகிறது. இந்தநிலையில், பெரும் பொருட்செலவில் La Paz நகரில் புதிய அரசு மாளிகை கட்டப்பட்டதால் ஆத்திரமடைந்த ஆயிரக்‍கணக்‍கான பொதுமக்‍களும், மாணவர்களும் புதிய மாளிகையை நோக்கி கண்டன பேரணி நடத்தினர். அப்போது, போலீசார் தடுத்து நிறுத்தியதால், பேரணியில் ஈடுபட்டவர்கள் வன்முறையில் இறங்கினர். கற்களையும், சிறிய வெடிகளையும் போலீசாரை நோக்கி வீசி எதிர்ப்பை காட்டியதால் அப்பகுதியே போர்க்‍களம் போல் காட்சியளித்தது.

ஆர்ப்பாட்டக்‍காரர்கள் பொதுச் சொத்துக்‍களை அடித்து நொறுக்‍கியதால், கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தி போலீசார் அவர்களை விரட்டியடித்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00