அமெரிக்‍க அதிபர் டிரம்புடன் நடத்திய பேச்சு வார்த்தையைத் தொடாந்து ரஷ்யா செல்கிறார் வடகொரியத் தலைவர் - அதிபர் புடினை சந்தித்து முக்‍கியப் பேச்சுவார்த்தை

Jun 15 2018 12:13PM
எழுத்தின் அளவு: அ + அ -

ரஷ்ய அதிபர் விளாடிமர் புடின் அழைப்பின் பேரில் வடகொரியத் தலைவர் கிம் ஜாங்-உன் வரும் செப்டம்பர் மாதம் ரஷ்யாவிற்கு பயணமாகிறார்.

கொரிய தீபகற்பத்தில் அவ்வப்போது ஏற்படும் போர் பதற்றத்தை தணிக்‍கவும், வடகொரியாவின் அணுஆயுத குவிப்பை கட்டுப்படுத்தவும் அமெரிக்‍கா நடவடிக்‍கை மேற்கொண்டது. இதற்கு வடகொரியாவும் சம்மதம் தெரிவித்ததால், அந்நாட்டுத் தலைவர் கிம் ஜாங்-உன்னும், அமெரிக்‍க அதிபர் டொனால்ட் டிரம்பும் கடந்த வாரம் சிங்கப்பூரில் சந்தித்து வரலாற்றுச் சிறப்புமிக்‍க பேச்சு வார்த்தையை நடத்தினர். அணு ஆயுதங்களை ஒழிக்‍க அப்போது இருதரப்பிலும் உறுதியளிக்‍கப்பட்டது. இதன் அடுத்தக்‍கட்டமாக ரஷ்ய அதிபர் விளாடிமர் புடினின் அழைப்பிற்கு இணங்க, கிம் ஜாங்-உன் அந்நாட்டிற்குச் செல்ல முடிவு செய்துள்ளார். வரும் செப்டம்பர் மாதம் கிம் ஜாங்-உன்னும், விளாடிமர் புடினும் சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளனர். இந்தச் சந்திப்பின்போது, அமெரிக்‍க அதிபருடன் நடத்திய பேச்சுவார்த்தைக்‍ குறித்து கிம் ஜாங்-உன், புடினிடம் விவாதிக்‍க இருப்பதாக வடகொரிய செய்தி நிறுவனங்கள் தெரிவிக்‍கின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00