வடகொரியாவின் நடவடிக்கைகள் அமெரிக்க தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்துக்கு அச்சுறுத்தலாக உள்ளது - அமெரிக்க நாடாளுமன்றத்தில் அதிபர் டிரம்ப் அளித்த அறிக்கையில் திடீர் குற்றச்சாட்டு

Jun 24 2018 1:38PM
எழுத்தின் அளவு: அ + அ -

தென்கொரியாவுடன் இணைந்து மேற்கொள்ளும் போர் பயிற்சிகளை கால வரையின்றி நிறுத்துவதாக அமெரிக்‍கா திடீரென அறிவித்துள்ளது.

கொரிய தீபகற்பத்தில் நிலவி வந்த பதற்றத்தை தணிக்‍கும் விதமாக சிங்கப்பூரில் கடந்த 12-ந் தேதி அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் ஆகிய இருவரும் சந்தித்துப் பேசினர். அணு ஆயுதங்களை முற்றிலும் அழித்துவிடுவதாக வடகொரியா தரப்பில் அப்போது தெரிவிக்‍கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

பேச்சுவார்த்தைப்படி வடகொரியா நடந்துகொள்ள தவறினால், தென்கொரியாவுடன் தொடர்ந்து கூட்டு போர் பயிற்சி நடைபெறும் என அமெரிக்‍கா தரப்பில் தெரிவிக்‍கப்பட்டது. மேலும் வடகொரியாவுக்‍கு எதிரான பொருளாதர தடைகள் உடனடியாக விலக்‍கிக்‍ கொள்ளப்பட மாட்டாது என்றும் செய்திகள் வெளியாகின. இதனால், சிங்கப்பூர் பேச்சுவார்த்தை தோல்வியடைந்துவிட்டதோ என்ற சந்தேகம் எழுந்தது. இந்த நிலையில், அமெரிக்க நாடாளுமன்றத்தில் டிரம்ப் தாக்‍கல் செய்த அறிக்கை ஒன்றில், வடகொரியாவிடம் இருந்து தொடர்ந்து அணு ஆயுத அச்சுறுத்தல் இருப்பதாக கூறியிருந்தார்.

கொரிய தீபகற்பத்தின் ஆயுத பயன்பாடு மற்றும் வடகொரிய அரசின் நடவடிக்கைகள், கொள்கைகள் ஆகியவை அமெரிக்க தேசிய பாதுகாப்பு, வெளியுறவுக்கொள்கை, பொருளாதாரத்துக்கு அசாதாரணமான அச்சுறுத்தலாக தொடர்வதாக குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் தற்போது திடீரென தென்கொரியாவுடனான கூட்டு போர்ப்பயிற்சி காலவரையின்றி ரத்து செய்யப்படுவதாக அமெரிக்‍க பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் வடகொரியா தொடர்பான அமெரிக்‍காவின் நிலைப்பாடு தொடர்ந்து குழப்பத்தில் இருப்பதாகவே தெரிகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00