ஊழல் வழக்கில் சிறை தண்டனை விதிக்‍கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், மகளுடன் இன்று தாயகம் திரும்புகிறார் - விமான நிலையத்திலேயே கைது செய்து சிறையில் அடைக்‍க ஏற்பாடுகள் தீவிரம்

Jul 13 2018 4:53PM
எழுத்தின் அளவு: அ + அ -

பாகிஸ்தானில் ஊழல் வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்‍கப்பட்டுள்ள அந்நாட்டு முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப், 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்‍கப்பட்டுள்ள நாவஸின் மகள் மரியம் ஆகியோர் இன்று கைது செய்யப்படலாம் என தகவல் வெளியாகிவுள்ளது.

பனாமா பேப்பர் விவகாரத்தில் சிக்கிய பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்-க்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் கடந்த 6-ம் தேதி தீர்ப்பளித்தது. நீதிபதி முகமது பஷீர் வெளியிட்ட தீர்ப்பில் நவாஸ் ஷெரீஃப்க்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், அவரின் மகள் மரியம் ஷெரீஃப்புக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் வழங்கி உத்தரவிட்டார்.

இந்நிலையில், புற்றுநோய் காரணமாக லண்டனில் சிகிச்சைப் பெற்றுவரும் நவாஸ் ஷெரீஃப்பின் மனைவி குல்சூம் நவாசின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதால், நவாஸும், அவரது மகளும் லண்டன் சென்றிருந்தனர். அவர்கள் இருவரும் இன்று பாகிஸ்தான் திரும்ப இருப்பதாக தகவல் வெளியானது. அதைத் தொடர்ந்து விமான நிலையத்தில் வைத்தே நவாஸ் ஷெரீஃப்பையும், அவரின் மகளையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இஸ்லாமாபாத் அல்லது லாகூர் விமான நிலையங்களில் ஏதாவது ஒன்றில் அவர்கள் வருவதற்கு வாய்ப்பிருப்பதால் இரண்டு விமான நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களைக் கைது செய்து சிறைக்கு அழைத்துச் செல்வதற்காக 2 ஹெலிகாப்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று லாகூர் விமான நிலையத்திலும், மற்றொன்று இஸ்லாமாபாத் விமான நிலையத்திலும் நிறுத்தி வைக்கப்படும் என தகவல்கள் கூறுகின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00