இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் ஏராளமான கட்டடங்கள் இடிந்து தரைமட்டம் : இடிபாடுகளில் சிக்‍கி 82 பேர் உயிரிழந்த பரிதாபம்

Aug 6 2018 12:41PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாயின. கட்டட இடிபாடுகளில் சிக்‍கி 82 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த ஏராளமானோர் மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்டுள்ளனர்.

இந்தோனேஷியாவின் லாம்போக் என்ற தீவில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 7-ஆக பதிவான இந்த நிலநடுக்‍கத்தால், பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு, வீடுகளிலிருந்தும், விடுதிகளிலிருந்தும் வெளியேறி சாலையில் தஞ்சம் புகுந்தனர். இந்த நிலநடுக்கத்​​தில் பல்வேறு பகுதிகளில் கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாயின. கட்டட இடிபாடுகளில் சிக்‍கி 82 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த ஏராளமானோர் மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்டுள்ளனர். கடல்பகுதியில் 15 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக, இந்தோனேசிய வானிலை ஆய்வகம் தெரிவித்துள்ளது. பாதிப்புகள் காரணமாக, அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்‍கப்பட்டு, ஒன்றரை மணி நேரத்திற்கு பின்னர் திரும்ப பெறப்பட்டது. மக்கள் அச்சமடைய வேண்டாம் என்றும், கடற்கரைக்கு அருகே இருக்க வேண்டாம் என்றும், உயரமான பகுதிகளுக்குச் செல்லுமாறும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00