பாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினராக இம்ரான்கான் பதவியேற்பதற்கு பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் நிபந்தனையுடன் அனுமதி

Aug 8 2018 3:48PM
எழுத்தின் அளவு: அ + அ -

பாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினராக இம்ரான்கான் பதவியேற்பதற்கு அந்நாட்டு தேர்தல் ஆணையம், நிபந்தனையுடன் கூடிய அனுமதி வழங்கியுள்ளது.

பாகிஸ்தான் நாட்டில் கடந்த மாதம் ஜூலை 25-ம் தேதியன்று நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுதேர்தலில் Tehreek-e-Insaf கட்சிக்‍கு தனிப்பெரும்பான்மை கிடைக்‍காவிட்டாலும் அதிக இடங்களில் வெற்றிபெற்று பிற கட்சிகள் மற்றும் சுயேச்சைகளுடன் ஆட்சியமைக்‍கிறது. அக்‍கட்சியின் தலைவரும் முன்னாள் கிரிக்‍கெட் கேப்டனுமான இம்ரான்கான், வரும் 14 அல்லது 15-ம் தேதியன்று பதவியேற்பார் எனக்‍ கூறப்படுகிறது.

இந்நிலையில் இம்ரான்கான் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்பதற்கு பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் நிபந்தனையுடன் கூடிய அனுமதி வழங்கியுள்ளது. 5 தொகுதிகளில் போட்டியிட்ட இம்ரான்கான், 3 தொகுதிகளில் வெற்றிபெற்றதாக அறிவிக்‍கப்பட்டாலும், மீதமுள்ள 2 தொகுதிகளில் அவரது வெற்றி குறித்த அறிவிக்‍கையை தேர்தல் ஆணையம் நிறுத்தி வைத்துள்ளது. வெற்றிபெற்ற 3 தொகுதிகளில் ஏதேனும் ஒரு தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்க இம்ரான்கானுக்‍கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. எனினும் தேர்தல் விதிமுறைகளை இம்ரான்கான் மீறியதாக தொடரப்பட்ட வழக்‍கு நிலுவையில் இருப்பதால், அவரது எம்.பி. பதவி, என்பது இந்த வழக்‍கு தொடர்பான தேர்தல் ஆணையத்தின் முடிவைப் பொறுத்து அமையும் என்றும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00