பாகிஸ்தானின் புதிய பிரதமராகிறார் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் - புதிய சபாநாயகராக Asad Qaiser பதவியேற்றார்

Aug 17 2018 12:35PM
எழுத்தின் அளவு: அ + அ -

முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான், பாகிஸ்தானின் புதிய பிரதமராக நாளை பதவியேற்க உள்ளார்.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கு அண்மையில் நடைபெற்ற தேர்தலில் எந்தக்‍ கட்சிக்‍கும் பெரும்பான்மை பலம் கிடைக்‍காத நிலையில், அதிக இடங்களைக் கைப்பற்றிய முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சி, பல்வேறு சிறிய கட்சிகளின் ஆதரவுடன் புதிய ஆட்சி அமைக்‍கவுள்ளது. பாகிஸ்தான் புதிய பிரதமராக இம்ரான்கான் நாளை பதவியேற்க உள்ளார்.

இந்நிலையில், பாகிஸ்தான் நாடாளுமன்றம் கடந்த 13-ம் தேதி கூடியது. அப்போது, இம்ரான்கான், பாகிஸ்தான் மக்‍கள் கட்சித் தலைவர் பிலாவல் சர்தாரி பூட்டோ உள்ளிட்டோர் எம்.பி.க்‍களாக பதவி ஏற்றனர். புதிய எம்.பி.க்‍கள் பதவி ஏற்றதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் சபாநாயகர் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் இம்ரான்கானின் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சி சார்பாக மூத்த தலைவர் Asad Qaiser களமிறக்‍கப்பட்டார். 11 எதிர்க்‍கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக பாகிஸ்தான் மக்‍கள் கட்சியிலிருந்து சையத் குர்ஷித் ஷா நிறுத்தப்பட்டார். அனைத்து எம்.பி.க்‍களும் வாக்‍களித்த பின்னர் வாக்‍கு எண்ணிக்‍கை நடைபெற்றது. இதில் இம்ரான் கான் கட்சி வேட்பாளர் Asad Qaiser, 176 வாக்‍குகள் பெற்றார். எதிர்த்து போட்டியிட்ட சையத் குர்ஷித் ஷாவுக்‍கு 146 வாக்‍குகள் கிடைத்தன. 8 வாக்‍குகள் செல்லாதவை என அறிவிக்‍கப்பட்ட நிலையில், சபாநாயகர் தேர்தலில் Asad Qaiser வெற்றி பெற்றதாக முன்னாள் சபாநாயகர் ஆயாஸ் சாதிக், முறைப்படி அறிவிப்பு வெளியிட்டார்.

இதையடுத்து, பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக Asad Qaiser பதவியேற்றார். அவருக்‍கு, முன்னாள் சபாநாயகர் ஆயாஸ் சாதிக் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். பின்னர் Asad Qaiser அவையை நடத்தும்போது அமளி நிலவியதால் அவையை 15 நிமிடம் அவர் ஒத்திவைத்தார்.

புதிய சபாநாயகாக பொறுப்பேற்றுள்ள Asad Qaiser, கைபர் பக்‍துங்வா மாகாண சட்டசபை சபாநாயகராக பதவி வகித்த அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்‍கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00