நைஜீரியாவில் கனமழை - 100-க்கும் மேற்பட்டோர் பலி : மக்களின் இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்பு

Sep 19 2018 11:04AM
எழுத்தின் அளவு: அ + அ -

நைஜீரியாவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்‍கில் சிக்கி இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் பலியானதாக தெரிவிக்‍கப்பட்டுள்ளது. பல்லாயிரக்‍கணக்‍கானோரின் இயல்பு வாழ்க்‍கை கடுமையாக பாதிக்‍கப்பட்டுள்ளது.

நைஜீரியா நாட்டில் கடந்த சில நாட்களாக தீவிரமாக பெய்து வரும் கனமழையால் பெரும்பாலான இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அந்நாட்டின் Benue ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால்,​ கெப்பி, எடோ, பெனோ, பாயெல்சா, கவ்ரா உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட மாகாணங்கள் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்படுள்ளன. இதனையடுத்து அங்குள்ள Kogi, Niger, Anambra மற்றும் Delta மாகாணங்களை பேரிடர் மாகாணங்களாக அந்நாட்டு பேரிடர் மீட்பு குழு அறிவித்துள்ளது. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அந்த மாகாணங்களில் நிவாரண மீட்பு பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00