சீனா-ஹாங்காங்கை இணைக்கும் உலகின் மிக நீளமான கடல் பாலம் திறப்பு - 3 மணி நேரத்திலிருந்து 30 நிமிடங்களாக குறைகிறது பயண நேரம்

Oct 23 2018 1:19PM
எழுத்தின் அளவு: அ + அ -

சீனா-ஹாங்காங்கை இணைக்கும் உலகின் மிக நீளமான கடல் பாலம் இரண்டு ஆண்டுகால தாமதத்திற்குப் பிறகு இன்று பொதுமக்‍கள் பயன்பாட்டிற்கு திறக்‍கப்பட்டது.

சீனா - ஹாங்காங் இடையிலான பயண தூரத்தை குறைக்கும்நோக்கில் திட்டமிடப்பட்டு, Zhuhai-Macao நகரங்களை இணைத்து கடலில் இந்தப் பாலம் கட்டப்பட்டுள்ளது. இதற்கான கட்டுமானப்பணிகள் 2009 ஆம் தொடங்கின. 55 கிலோ மீட்டர் நீளம் கொண்ட கடல் பாலத்தின் பயணிக்கும்போது, சீனாவின் ஜூஹாவ் நகரிலிருந்து, ஹாங்காங்கின் மகோ என்ற இடத்திற்கான பயண நேரம், 3 மணி நேரத்திலிருந்து 30 நிமிடங்களாக குறைந்துவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று நகரங்களையும், 68 மில்லியன் மக்களை இணைக்கும் இந்த பாலம், சுற்றுலாப் பயணிகள் எளிதாக கடந்து செல்ல வழி வகுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தில் பயணம் செய்ய சிறப்பு வாடகை கார்களை பயன்படுத்த வேண்டும் அல்லது விரைவுப் பேருந்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த 2016-ஆம் ஆண்டிலேயே திறக்கப்பட இருந்த இந்த பாலம், சில தடங்கல்களால் தாமதமாகி வந்த நிலையில், இப்பாலத்தை சீன அதிபர் ஜீ ஜின் பிங் இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்துவைத்தார். இதற்கான விழாவில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00