அமெரிக்கா மீண்டும் அணு ஆயுதங்கள் தயாரிக்கும் என்ற அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்புக்கு உலக நாடுகள் கண்டனம் - அமெரிக்கா-ரஷ்யா மீண்டும் பேச்சு வார்த்தை நடத்த வேண்டுமென வலியுறுத்தல்

Oct 24 2018 11:24AM
எழுத்தின் அளவு: அ + அ -

அணு ஆயுதங்கள் தடை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகும் என்றும், மீண்டும் அணு ஆயுதங்கள் தயாரிக்கும் என்றும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

அணு ஆயுத தடை ஒப்பந்தத்தை ரஷ்யாவும், சீனாவும் மீறிவிட்டதாக குற்றம்சாட்டியுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், அமெரிக்கா அணு ஆயுத ஏவுகணைகளை தயாரிக்கும் என அறிவித்துள்ளார். அமெரிக்க அதிபரின் இந்த அதிரடி அறிவிப்பு உலக நாடுகளை கலக்கம் அடையச் செய்துள்ளன. அமெரிக்காவின் குற்றச்சாட்டை மறுத்துள்ள ரஷ்யா, இந்த முடிவால் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்படும் தெரிவித்துள்ளது.

இதனிடையே, ரஷ்ய அதிபரை சந்தித்த அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் John Bolton, ஏவுகணை விஷயத்தில் ட்ரம்பின் முடிவில் மாற்றம் இல்லை என தெரிவித்துள்ளார்.

ட்ரம்பின் முடிவுக்கு ஐரோப்பிய ஒன்றியமும், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளும் அதிர்ச்சி தெரிவித்துள்ளன. அணு ஆயுத விஷயத்தில் அமெரிக்கா-ரஷ்யா மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென உலக நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00