இலங்கை அதிபர் சிறிசேனாவை கண்டித்து ரனில் விக்ரமசிங்கே கட்சி சார்பில் மாபெரும் கண்டன பேரணி - கொழும்பு நகரில் பதற்றம் ஏற்பட்டதை அடுத்து அதிரடிப்படை குவிப்பு

Oct 31 2018 3:41PM
எழுத்தின் அளவு: அ + அ -

அதிபர் சிறிசேனாவை கண்டித்து ரனில் விக்ரமசிங்கே கட்சி சார்பில் கொழும்பு நகரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதனால் பதற்றம் ஏற்பட்டதை அடுத்து அதிரடிப்படை குவிக்கப்பட்டது.

இலங்கை அதிபர் சிறிசேனாவுக்கும், பிரதமராக பதவி வகித்து வந்த ரனில் விக்ரமசிங்கேவுக்கும் இடையே பனிப்போர் நிலவி வந்தது. இந்த மோதல் உச்சத்தை எட்டிய நிலையில் கடந்த வாரம், விக்ரமசிங்கேவை பிரதமர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கிய சிறிசேனா, முன்னாள் அதிபர் ராஜபக்சேவை புதிய பிரதமராகவும் நியமித்தார்.

மேலும் ராஜபக்சே உடனடி பலப்பரீட்சையை தவிர்க்கும் விதமாக நாடாளுமன்றத்தை வருகிற 16-ந் தேதி வரை முடக்கியும் வைத்தார். ஆனால் இதற்கு சபாநாயகர் கரு ஜெயசூர்யா எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இதனால் இலங்கையில் அரசியலில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது.

சிறிசேனாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட சர்வதேச நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன.

இந்த நிலையில் அதிபர் சிறிசேனாவின் நடவடிக்கையை கண்டித்து கொழும்பு நகரின் பல இடங்களில் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சித் தொண்டர்கள் மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் பெருமளவில் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சிறிசேனாவின் உருவ பொம்மை ஊர்வலத்தில் சிலர் எடுத்து வந்து அதன் மீது கடுமையான தாக்குதலும் நடத்தினர்.

பிரதமர் மாளிகையைச் சுற்றி ஆர்ப்பாட்டக்காரர்கள் நூற்றுக்கணக்கில் திரண்டதால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் 2 ஆயிரம் போலீசார், 600 போக்குவரத்து போலீசார், 10 அதிரடிப்படை குழுக்களும் குவிக்கப்பட்டன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00