அமெரிக்க இடைத்தேர்தலில் பிரதிநிதிகள் சபையில் டிரம்பின் குடியரசுக் கட்சிக்கு சரிவு : பெரும்பாலான இடங்களில் ஜனநாயக கட்சி முன்னிலை

Nov 7 2018 3:59PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்க இடைத்தேர்தலில் பிரதிநிதிகள் சபையில் டிரம்பின் குடியரசுக் கட்சி சரிவை சந்தித்துள்ளது. செனட் சபையை அக்கட்சி தக்க வைத்துக்கொண்டுள்ளது.

அமெரிக்க காங்கிரஸ் என்று அழைக்கப்படும் அமெரிக்க நாடாளுமன்றம் செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை என 2 சபைகளை கொண்டுள்ளது. செனட் சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை 100 ஆகவும், பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை 435 ஆகவும் உள்ளது. இந்நிலையில், பிரதிநிதிகள் சபைக்கும், பதவிக்காலம் முடிவடையும் 35 செனட் உறுப்பினர் தொகுதிகளுக்கும், 36 மாநில கவர்னர் பதவிகளுக்கும் நேற்று தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் மக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு வாக்களித்தனர். பதிவான வாக்குகள் உடனே எண்ணப்பட்டன. தேர்தல் முடிவுகளின்படி ஜனநாயக கட்சி பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மை பெற்றுள்ளது. செனட் சபையில் குடியரசுக் கட்சி அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது.

பிரதிநிதிகள் சபையில் பெரும்பாலான இடங்களில் ஜனநாயக கட்சி முன்னிலை வகிக்கிறது. இனவெறி, குடியுரிமை பிரச்னை உள்ளிட்ட காரணங்களால் டிரம்பின் குடியரசு கட்சி இத்தேர்தலில் பின்னடைவை சந்தித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00