இலங்கை பிரதமராக ராஜபக்சே செயல்பட இடைக்‍காலத் தடை - இலங்கை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய திட்டம்

Dec 4 2018 4:24PM
எழுத்தின் அளவு: அ + அ -

இலங்கை பிரதமராக தொடர இடைக்கால தடை விதித்ததை எதிர்த்து இலங்கை உயர் நீதிமன்றத்தில் இன்று மேல்முறையீடு செய்ய ராஜபக்சே திட்டமிட்டுள்ளார்.

இலங்கையில் ரணில் விக்‍ரமசிங்கேவை நீக்‍கிவிட்டு, ராஜபக்‍சேவை பிரதமராக அதிபர் சிறிசேனா அண்மையில் நியமித்தார். இச்சம்பவம் அந்நாட்டு அரசியலில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்த குழப்பத்திற்கு இடையே ராஜபக்‍சேவுக்‍கு பெரும்பான்மை கிடைக்‍காததால், அவரால் பிரதமராக நீடிக்‍க முடியவில்லை. இந்த சூழலில், ராஜபக்‍சேவுக்‍கு எதிராக 122 எம்.பி.க்‍கள் இலங்கை நீதிமன்றத்தில் வழக்‍கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்‍கை விசாரித்த நீதிமன்றம், ராஜபக்‍சே பிரதமராக செயல்பட இடைக்‍கால தடை விதித்தது. இந்த தடை அமைச்சர்கள், இணை அமைச்சர்கள் ஆகியோருக்‍கும் பொருந்தும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு ராஜபக்‍சேவுக்‍கும், சிறிசேனாவுக்‍கும் மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, இலங்கை பிரதமராக தொடர இடைக்கால தடை விதித்ததை எதிர்த்து இலங்கை உயர் நீதிமன்றத்தில் இன்று மேல்முறையீடு செய்ய ராஜபக்சே திட்டமிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00