27 ஈரான் ராணுவ வீரர்களை கொன்ற பாகிஸ்தான் பயங்ரவாதி : ஆதாரத்துடன் ஈரான் தளபதி குற்றச்சாட்டு

Feb 20 2019 12:31PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஈரானில் 27 ராணுவ வீரர்களை கொன்று, தற்கொலைப்படை தாக்குதலை நடத்திய நபர் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவன் என்பதை ஈரான் ராணுவ பிரிகேடியர் ஜெனரல் ஆதாரத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ஜெய்-இ-முகமது என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

இதேபோல், ஈரானிலும் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தியுள்ளனர். பாகிஸ்தானின் பலுசிஸ்தான் எல்லையில் உள்ள ஈரான் நாட்டின் சிஸ்டான் பகுதியில் ஈரான் ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த புதன்கிழமை அப்பகுதிக்குள் புகுந்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள், ராணுவ வீரர்கள் மீது அதிரடியாக தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இதில் 27 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், ஈரானில் 27 ராணுவ வீரர்களை கொன்ற தற்கொலைப்படை தாக்குதலை நடத்திய நபரின் பெயர் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஹபீஸ் முஹம்மது அலி என ஈரான் ராணுவத்தின் பிரிகேடிடர் ஜெனரல் முஹம்மத் பக்பவுர் ஆதாரத்துடன் நேரடியாக குற்றம்சாட்டியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00