தோல்வியில் முடிந்தது டிரம்ப்-கிம் ஜாங் உன் பேச்சுவார்த்தை - உடன்பாடு எட்டப்படவில்லை என அமெரிக்‍க தரப்பில் விளக்‍கம்

Feb 28 2019 5:13PM
எழுத்தின் அளவு: அ + அ -
அமெரிக்க அதிபர் Donald Trump மற்றும் வடகொரிய தலைவர் Kim Jong Un ஆகியோர் இடையே வியட்நாமில் நடைபெற்ற 2-ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.

Donald Trump மற்றும் Kim Jong Un ஆகிய இருவரும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிங்கப்பூரில் உள்ள சென்ட்டோசா தீவில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பில் அணு ஆயுத பரிசோதனைகளை நடத்துவதில்லை என்று வடகொரியாவும், அந்நாட்டுக்கு பாதுகாப்புக்‍கு உத்தரவாதம் வழங்குவோம் என அமெரிக்காவும் ஒப்புதல் வழங்கின.

இதன் அடுத்தகட்டமாக இருநாட்டு அதிபர்களும் மீண்டும் சந்திக்‍க ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, வியட்நாம் தலைநகர் ஹனோயில் நேற்று இவர்கள் மீண்டும் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அணு ஆயுதங்களை கைவிட்டால், வடகொரியாவுக்கு சிறப்பான எதிர்காலம் உள்ளது என டிரம்ப் குறிப்பிட்டார். முடிந்த அளவுக்கு சிறப்பான ஒத்துழைப்பு அளிப்பதாக கிம் அப்போது உறுதி அளித்தார்.

இதனையடுத்து, Hanoi நகரில் உள்ள Metropole ஹோட்டலில் இன்று 2-வது நாளாக இருதரப்பு சந்திப்பு நடைபெற்றது. 40 நிமிடங்கள் இருநாட்டுத் தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் முக்‍கிய உடன்பாடு எட்டப்படாலாம் என எதிர்பார்க்‍கப்பட்ட நிலையில், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததாக அறிவிக்‍கப்பட்டுள்ளது. அமெரிக்‍க அரசின் தலைமையகமான வெள்ளை மாளிகை இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3594.00 Rs. 3844.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.20 Rs. 48000.00
மும்பை Rs. 48.20 Rs. 48000.00
டெல்லி Rs. 48.20 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.20 Rs. 48000.00