ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து முறைப்படி விலகும் 'பிரெக்ஸிட்' நடவடிக்கை - பிரதமர் தெரசா மே கொண்டு வந்த தீர்மானம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் 2-வது முறையாக தோல்வி

Mar 13 2019 11:05AM
எழுத்தின் அளவு: அ + அ -

"பிரெக்ஸிட்" விவாகரம் தொடர்பாக தெரசா மே கொண்ட வந்த தீர்மானம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் 2-வது முறையாக தோல்வி அடைந்தது.

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து முறைப்படி விலகுவதற்கான 'பிரெக்ஸிட்' நடவடிக்கையை பிரதமர் தெரசா மே எடுத்து வருகிறார். இதையொட்டி ஐரோப்பிய கூட்டமைப்புடன் அவர் ஏற்படுத்திய ஒப்பந்தத்தை இங்கிலாந்து நாடாளுமன்றம் நிராகரித்துவிட்டது. மேலும் ஒப்பந்தம் இல்லாமல் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறும் திட்டத்துக்கு முட்டுக்கட்டை போட்ட எம்.பி.க்கள் புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த தெரசா மேவை வலியுறுத்தினர்.

ஆனால் ஐரோப்பிய கூட்டமைப்பு, புதிய ஒப்பந்தத்துக்கு வாய்ப்பு இல்லை என கூறிவிட்டது. 'பிரெக்ஸிட்' நடவடிக்கையின் காலக்கெடு அடுத்த இம்மாதம் 29-ந் தேதி முடிவடைவதால், ஒப்பந்தம் இல்லாமல் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இந்த நிலையில் ஒப்பந்தம் இல்லா 'பிரெக்ஸிட்' தொடர்பாக இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் தெரசா மே கொண்டு வந்த தீர்மானத்தில் மீதான வாக்கெடுப்பு 149 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது. இதன் மூலம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தெரசா மே கொண்டு வந்த தீர்மானம் 2வது முறையாக நிராகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00