இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக மேலும் பலர் கைது - நாடு முழுவதும் போடப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டதாக அறிவிப்பு

Apr 22 2019 12:58PM
எழுத்தின் அளவு: அ + அ -

இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக மேலும் பலர் கைது செய்யப்பட்டிருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் போடப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு தற்போது தளர்த்தப்பட்டுள்ளது.

இலங்கை தலைநகர் கொழும்புவில் நேற்று, கொச்சிக்கடை அந்தோணியார் தேவாலயம், நீர் கொழும்பு தேவாலயம், மட்டக்களப்பு தேவாலயம் மற்றும் நட்சத்திர விடுதிகள் என 8 இடங்களில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த குண்டுகள் வெடித்தன. இந்த பயங்கர குண்டு வெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்‍கை 290ஆக அதிகரித்திருக்‍கும் நிலையில், 400-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக ஏற்கெனவே 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் 16 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், இலங்கை முழுவதும் பிறப்பிக்‍கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு இன்று காலை 6 மணிமுதல் விலக்‍கிக்‍கொள்ளப்பட்டதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அதேநேரம் நாட்டின் முக்‍கியப் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00