இலங்கை தொடர் குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு I.S. பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்பு - முன்னேச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத விவகராத்தில் முப்படை தளபதிகளை மாற்ற இலங்கை அரசு முடிவு

Apr 24 2019 11:47AM
எழுத்தின் அளவு: அ + அ -
இலங்கை தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களுக்கு I.S. பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. முன்னேச்சரிக்கை விடுத்தும் உரிய பாதுகாப்பு வழங்காததால், அந்நாட்டு முப்படை தளபதிகளை மாற்ற இலங்கை அரசு முடிவெடுத்துள்ளது.

இலங்கை குண்டு வெடிப்புகளில் இந்தியாவைச் சேர்ந்த 8 பேர் உயிரிழந்ததாக ஏற்கெனவே தகவல் வெளியான நிலையில், மேலும் 2 பேர் உயிரிழந்துவிட்டதாக தற்போது தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்‍கை 10-ஆக உயர்ந்துள்ளது.

கொடூர குண்டு வெடிப்புச் சம்பவங்கள் நிகழ்த்தப்பட்டு, 2 நாட்கள் ஆன பின்னர், இச்சம்வங்களுக்‍கு, Islamic State எனப்படும் I.S. பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. அமெரிக்‍க ஆதரவு நாடான இலங்கையையும், அங்கு வசிக்‍கும் கிறிஸ்தவ மக்‍களையும் குறிவைத்து, இந்தத் தாக்‍குதல்களை நடத்தியவர்கள் I.S. தீவிரவாதிகள் என இந்த பயங்கரவாத அமைப்பின் செய்தி நிறுவனமான 'Amaq' தெரிவித்துள்ளது.

நியூசிலாந்தின் Christchurch நகரில், 2 மசூதிகளில் சென்ற மாதம் நிகழ்த்தப்பட்ட தாக்‍குதல்களில் 50-க்‍கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவத்திற்குப் பழி வாங்கும் வகையில் இலங்கையில் தேவாலயங்கள் மீது வெடிகுண்டுத் தாக்‍குதல் நடத்தப்பட்டிருப்பதாக இலங்கை பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் Ruwan Wijewardene, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார். இதுவரை நடத்தப்பட்ட புலன் விசாரணையில் இந்தத் தகவல் வெளியாகியிருப்பதாகவும் கூறினார்.

இதனிடையே, வெடிகுண்டுத் தாக்‍குதல் சம்பவங்களில் தொடர்புடைய 40 பேரை இலங்கை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. வெடிகுண்டுச் சம்பவங்களால் கொழும்பு மக்‍கள் பெரும் பீதிக்‍கு ஆளாகியுள்ள நிலையில், கண்டெய்னர் லாரி ஒன்றும் மற்றொரு வேனும் பெருமளவில் வெடிகுண்டுகளுடன் சுற்றிக்‍ கொண்டிருப்பதாக கொழும்பு துறைமுக பாதுகாப்பு இயக்‍குனர் எச்சரிக்‍கை விடுத்துள்ளார்.

கொழும்புவில் தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்படக்‍ கூடும் என உளவுத்துறை முன்கூட்டியே எச்சரிக்‍கை விடுத்திருந்தும், உரிய முன்னெச்சரிக்‍கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்‍கைகளை மேற்கொள்ளத் தவறியதற்காக இலங்கை அரசு பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளது.

இதையடுத்து, நாட்டின் பாதுகாப்புபடையின் தலைமைகளை இன்றைக்குள் மாற்ற இருப்பதாகவும் இலங்கை அதிபர் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களுக்‍கு அஞ்சலி செலுத்தும் வகையில், இலங்கை முழுவதும் தேசிய துக்‍கம் அனுசரிக்‍கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00