எகிப்து முன்னாள் அதிபர் நீதிமன்றத்தில் மயங்கி விழுந்து மரணம் : முர்சி கொலை செய்யப்பட்டுள்ளதாக ஆதரவாளர்கள் குற்றச்சாட்டு

Jun 18 2019 5:14PM
எழுத்தின் அளவு: அ + அ -
எகிப்து முன்னாள் அதிபர் முகமது முர்சி, நீதிமன்றத்தில் மயங்கி விழுந்து மரணம் அடைந்தார். அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக தெரிவிக்‍கப்பட்டுள்ள நிலையில், கொலை செய்யப்பட்டுள்ளதாக ஆதரவாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

எகிப்து நாட்டில் ஜனநாயக முறையில் முதன்முறையாக அதிபராக தேர்வு செய்யப்பட்டவர் முகமது முர்சி. அவரை, கடந்த 2011ம் ஆண்டு, அந்நாட்டு ராணுவம், வலுக்கட்டாயமாக பதவியில் இருந்து நீக்கியது. அதிபர் மாளிகையின் முன்பு போராட்டம் நடத்தியவர்களை கொன்ற குற்றத்திற்காக, முகமது முர்சிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் பல வழக்குகள் அவருக்கு எதிராக நிலுவையில் இருந்தன.

இந்நிலையில், வழக்கு விசாரணை ஒன்றுக்‍காக, முர்சி, நேற்று நீதிமன்றத்தில் ஆஜரானார். கண்ணாடி கூண்டுக்குள் இருந்த பேசிய அவர், தம்மிடம் பல ரகசியங்கள் இருப்பதாகவும் அதை வெளியிட்டால் எகிப்து நலனுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார். அப்போது திடீரென நீதிமன்றத்திலேயே மயங்கி விழுந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன்பே அவர் உயிரிழந்தார். 67 வயதாகும் முர்சி, மாரடைப்பால் உயிரிழந்ததாக அறிவிக்‍கப்பட்டுள்ளது. எனினும், முகமது முர்சி கொலை செய்யப்பட்டுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00