ஹாங்காங் அரசின் புதிய மசோதாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு : G20 நாடுகளின் தூதரகங்கள் முன்பு மக்கள் போராட்டம் - மசோதாவை ரத்து செய்யவேண்டும்-G20 தலைவர்களுக்கு கோரிக்கை

Jun 27 2019 11:01AM
எழுத்தின் அளவு: அ + அ -

சீனாவுக்கு நாடு கடத்தி விசாரிக்கும் மசோதாவை திரும்பப்பெற வலியுறுத்த வேண்டும் என, G20 நாடுகளின் தலைவர்களுக்கு ஹாங்காங் நாட்டு போராட்டக்காரர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஹாங்காங் மக்களையும், அங்கு சுற்றுலாப் பயணியாக வருபவர்களும் குற்றச்சாட்டுக்கு ஆளானால், அவர்கள் சீனாவுக்கு நாடுகடத்தப்பட்டு விசாரிக்‍கும் புதிய சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டது. இதற்கு நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் சாலைகளில் திரண்டு போராட்டம் நடத்தி எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து, சட்டத் திருத்த மசோதாவை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக ஹாங்காங் நிர்வாகத் தலைவர் கேரீ லேம் அறிவித்தார்.

இந்நிலையில், வரும் 28, 29-ம் தேதிகளில் ஜப்பானின் Osaka நகரில் நடைபெறும் G20 மாநாட்டில் பங்கேற்கும் பல்வேறு நாட்டுத் தலைவர்களுக்‍கும் ஹாங்காங் மக்‍கள் கோரிக்‍கை விடுத்துள்ளனர். அதன்படி, மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்த வேண்டும் எனக் கோரி, ஹாங்காங்கில் உள்ள G20 நாடுகளின் தூதரகங்களின் முன்பு, அந்த அந்த நாடுகளின் மொழிகளில் தங்கள் கோரிக்‍கைகள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி ஆயிரக்‍கணக்‍கானோர் போராட்டம் நடத்தினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00