போதை பொருளுக்‍கு எதிராக நடவடிக்‍கை மேற்கொண்டு வருவதால் உயிருக்‍கு ஆபத்து - இலங்கை அதிபர் சிறிசேனா அச்சம்

Jul 3 2019 5:24PM
எழுத்தின் அளவு: அ + அ -

போதை பொருளுக்‍கு எதிராக நடவடிக்‍கை மேற்கொண்டு வருவதால், என் உயிருக்‍கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக இலங்கை அதிபர் சிறிசேனா தெரிவித்துள்ளார்.

இலங்கை தலைநகர் கொழும்புவில் தேசிய போதைப் பொருள் ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அதிபர் சிறிசேனா, கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தொடர் வெடிகுண்டுத் தாக்‍குதல் சம்பவத்திற்கும், சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்‍கும் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டினார்.

மேலும், இலங்கையில் போதைப் பொருளுக்‍கு எதிராக நடவடிக்‍கை மேற்கொள்வதால் தனது உயிருக்‍கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும், இலங்கை உளவுத்துறை அமைப்பு மூலம் இந்தத் தகவல் கிடைத்துள்ளதாகவும் இலங்கை அதிபர் மைதிரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் கடத்தல் குற்றவாளிகளுக்‍கு மரண தண்டனையை நிறைவேற்ற சிறிசேனா மேற்கொண்டுள்ள முயற்சிக்‍கு பிரதமர் விக்‍ரமசிங்கே எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மரண தண்டனையை ஒழிக்‍க வேண்டும் என அவர் வலியுறுத்தி வருகிறார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00