ரஷ்யா உடனான ஏவுகணை ஒப்பந்தம் முடிவு- ஏவுகணை சோதனை நடத்திய அமெரிக்கா : அமெரிக்க நடவடிக்கைக்கு ரஷ்யா கண்டனம்

Aug 21 2019 4:27PM
எழுத்தின் அளவு: அ + அ -

ரஷ்யா உடனான ஏவுகணை ஒப்பந்தத்தை முறித்து கொண்டதை தொடர்ந்து, நடுத்தர ஏவுகணை சோதனையை அமெரிக்கா நடத்தியுள்ளது. இதற்கு ரஷ்யா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பனிப்போர் காலத்தில் 1987-ம் ஆண்டு அமெரிக்கா சோவியத் ரஷியா இடையே அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் இரு நாடுகளும் தரையில் இருந்து ஏவப்படும் குறுகிய மற்றும் நடுத்தர தூர ஏவுகணைகளை சோதிக்க தடை விதித்தது. ரஷியா இந்த ஒப்பந்தத்தை மீறி, ஏவுகணைகளை சோதிப்பதாக குற்றம் சாட்டி வந்த அமெரிக்கா கடந்த மாதம் ரஷியா உடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியது. இந்த நடவடிக்கை புதிய ஆயுத போட்டிக்கு வழிவகுக்கும் என சர்வதேச கண்காணிப்பாளர்கள் கவலை தெரிவித்தனர்.

இந்நிலையில், தரையில் இருந்து ஏவப்படும் நடுத்தர தூர ஏவுகணை ஒன்றை அமெரிக்கா சோதித்தது. இது தொடர்பாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கலிபோர்னியா கடற்கரையில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை 500 கிலோ மீட்டர் தொலைவுக்கு பறந்து அதன் இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தது என கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில் அமெரிக்காவின் ஏவுகணை சோதனை கவலை அளிப்பதாக கூறியுள்ள ரஷ்யா, இரு நாடுகளுக்கு இடையே ராணுவ ரீதியாக பதற்றத்தை ஏற்படுத்துவதற்காக அமெரிக்கா இந்த நடவடிக்‍கையில் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00