ரஷ்யா உருவாக்கியுள்ள உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் - 5 ஆயிரம் கிலோ மீட்டர் கடல் பயணம் இன்று தொடக்‍கம்

Aug 23 2019 12:34PM
எழுத்தின் அளவு: அ + அ -

ரஷியாவை சேர்ந்த ரொஸாட்டம் ஸ்டேட் அணுசக்தி கார்ப்பரேசன், உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையத்தை உருவாக்கியுள்ளது. அகடமிக் லோமோனோசோவ் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மிதக்கும் அணுமின் நிலையம் ரஷ்யாவின் பின் தங்கியுள்ள பகுதிகளுக்கான எரிசக்தி தேவைகளை தீர்ப்பதில் முக்கிய பங்காற்றும் என ரஷ்யா தெரிவித்துள்ளது. எனினும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இந்த மிதக்கும் அணுமின் நிலையம் குறித்து கவலை தெரிவித்துள்ளனர். இதனை 'கடலில் உள்ள செர்னோபில் என்றும் அணு டைட்டானிக் என்றும் அவர்கள் அழைக்கின்றனர். இந்நிலையில், வடகிழக்கு சைபீரியாவை நோக்கிய தனது 5 ஆயிரம் கிலோ மீட்டர் பயணத்தை அகடமிக் லோமோனோசோவ் இன்று தொடங்குகிறது. இந்த ஆண்டு இறுதி தனது உற்பத்தியை இந்த மிதக்கும் அணு நிலையம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00