சர்வதேச விவகாரம் ஆகும் அமேசான் காட்டுத் தீ - பிரான்ஸ் அதிபர், நடிகர் லியானார்டோ ஆகியோர் கண்டனம்

Aug 23 2019 10:38AM
எழுத்தின் அளவு: அ + அ -

அமேசான் காட்டுத் தீ சர்வதேச பிரச்சினை என்றும் ஜி 7 உச்சி மாநாட்டில் இந்த விவகாரம் தொடர்பாக பேச முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரன் வலியுறுத்தியுள்ளார்.

தென் அமெரிக்க கண்டனத்தில் உள்ள அமேசான் காடுகள் உலகின் நுரையீலாக கருதப்படுகிறது. உலக ஆக்சிஜன் தேவையில் 20 சதவீதத்தை இந்த காடுகள் பூர்த்தி செய்கின்றன. அமேசான் வனப் பகுதியில் தற்போது காட்டுத் தீ ஏற்பட்டுள்ளதால் ஏராளமான மரங்கள் தீக்‍கிரையாகியுள்ளன. இந்தத் தீயை அணைக்க முடியாமல் பிரேசில், பொலிவியா ஆகிய நாடுகள் திணறி வருகின்றன. இந்நிலையில், அமேசான் காட்டுத் தீ தொடர்பாக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், தனது டுவிட்டர் பக்கத்தில், நமது வீடு எரிந்துகொண்டிருக்கிறது என்றும், இந்த விவகாரம் சர்வதேச பிரச்சனை என்றும் குறிப்பிட்டுள்ளார். ஜி 7 மாநாட்டில் அமேசான் காட்டுத் தீ விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேபோல் பிரபல ஹாலிவுட் நடிகரான லியானார்டோ டிகாப்பிரியோ, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பூமிக்கு தேவையான ஆக்சிஜனில் 20 சதவீதத்தை உற்பத்தி செய்யும் அமேசான் காட்டில் கடந்த16 நாட்களுக்கு மேலாக தீ பறிந்து எரிந்துகொண்டிருப்பதாகவும் எந்த ஊடகமும் இதனை கண்டுகொள்ளவில்லை என்றும் கடுமையாக சாடியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00