பிரான்ஸ் நாட்டின் பையாரிஸ் நகரில் தொடங்கியது ஜி7 உச்சிமாநாடு-பொருளாதார மந்த நிலை, சுற்றுச்சூழல் குறித்து தலைவர்கள் முக்கிய ஆலோசனை

Aug 25 2019 3:56PM
எழுத்தின் அளவு: அ + அ -

பிரான்ஸ் நாட்டில் தொடங்கிய ஜி7 மாநாட்டில் அமேசான் காட்டுத்தீ, சர்வதேச பொருளாதார மந்த நிலை, பாலின பாகுபாடு உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படுகின்றன.

பிரான்ஸ் நாட்டின் பையாரிட்ஸ் நகரில் ஜி7 உச்சி மாநாடு நேற்று தொடங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் பிரான்ஸ், அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி, பிரிட்டன், கனடா மற்று இத்தாலி நாட்டு தலைவர்கள் பங்கேற்றனர். அமேசான் காட்டுத்தீ சர்வதேச பிரச்சினையாக கருதப்பட்டு அது குறித்து முக்கியமாக விவாதிக்கப்படவுள்ளது. மாநாட்டின் போது சுற்றுச்சூழல் முக்கிய விவாதப்பொருளாக உள்ளது. இதற்காக பையாரிட்ஸ் நகரில் மாசுபாட்டை குறைக்கும் வகையிலான ஹைட்ரஜன் சைக்கிள்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சியின் போது பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை சந்திக்கவுள்ளார். அப்போது காஷ்மீர் குறித்து இருவரும் விவாதிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாநாட்டை ஒட்டி நகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00