அமேசான் காட்டுத் தீயை அணைக்கும் பணி தீவிரம் : விமானம், ஹெலிகாப்டர் மூலம் தீயை அணைக்க முயற்சி

Aug 26 2019 12:18PM
எழுத்தின் அளவு: அ + அ -

பொலிவியாவில் உள்ள அமேசான் காடுகளில் பற்றி எரியும் தீயை, ஹெலிகாப்டர் மற்றும் விமானங்கள் மூலம் அணைக்‍கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

உலக அளவில் 20 சதவீத ஆக்சிஜனை வெளியிடுவதால், உலகின் நுரையீரல் என்று வர்ணிக்கப்படும் அமேசான் காடுகளின் பல்வேறு இடங்களில் கடந்த சில வாரங்களாக தீ பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. 8 நாடுகளில் பரந்து விரிந்துள்ள அமேசான் காடுகளின் பெரும்பாலான பகுதிகள் பிரேசில் மற்றும் பொலிவியாவில் உள்ளன. கட்டுக்கடங்காமல் எரிந்து கொண்டிருக்கும் தீயை அணைப்பதற்கு குளோபல் சூப்பர் டேங்கர் நிறுவனத்திடம் இருந்து போயிங் 747 ரகத்தை சேர்ந்த விமானத்தை 14 பேர் அடங்கிய குழுவினர் பொலிவியா வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சூப்பர் டேங்கர் விமானம் ஒரே தடவையில் சுமார் 71 ஆயிரம் லிட்டர் தண்ணீரை கீழே கொட்டும் வல்லமை கொண்டது. சூப்பர் டேங்கருடன் இணைந்து ஹெலிகாப்டர்களும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.

இதேபோல், ஏராளமான தீயணைப்பு வீரர்களும், தீயை அணைக்‍கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00