ஊதியம் வழங்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து சர்வதேச அளவில் விமானிகள் வேலைநிறுத்தம் -பிரிட்டீஷ் ஏர்வேஸ் விமான போக்‍குவரத்து அடியோடு முடக்‍கம்

Sep 9 2019 1:56PM
எழுத்தின் அளவு: அ + அ -
சர்வதேச அளவில் ‍‌வேலைநிறுத்தப் போராட்டத்தில் விமானிகள் ஈடுபட்டுள்ளதால், அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்படுவதாக, பிரிட்டீஷ் ஏர்வேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிரிட்டீஷ் ஏர்வேஸ் விமான நிறுவனம், தனது நிறுவனத்தில் பணிபுரியும் விமானிகளுக்கு, ஊதியம் வழங்கவில்லை எனவும், ஊதியம் பிடித்தம் செய்யப்படுவதாகவும், விமானிகள் தரப்பில், பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ் விமானிகள் சங்கத்தில் புகார் கூறப்பட்டது. இதற்கு, பிரிட்டீஷ் ஏர்வேஸ் நிறுவனம் செவி சாய்க்கவில்லை.

இதையடுத்து, இன்று விமானிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் நாளையும், வரும் 27 ஆம் தேதியும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என விமானிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து, இன்று அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்படுவதாக, பிரிட்டீஷ் ஏர்வேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், விரைவில் விமானிகளுடன் ‍பேசி தீர்வு காணப்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00