மாஸ்கோ நகர தேர்தலில் ஆளுங்கட்சிக்கு பின்னடைவு : பெரும்பான்மை பெற்றபோதிலும் மூன்றில் ஒரு பகுதி இடங்களை இழந்தது

Sep 10 2019 8:15AM
எழுத்தின் அளவு: அ + அ -
ரஷ்யாவின் மாஸ்கோ நகர கவுன்சிலுக்‍கு நடைபெற்ற தேர்தலில் மூன்றில் ஒரு பகுதி இடத்தை ஆளும்கட்சி இழந்துள்ளது.

ரஷ்யாவின் மாஸ்கோ நகர கவுன்சிலுக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் ரஷியாவை ஆளும் யுனைடெட் ரஷியா கட்சியை எதிர்க்கும் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் 16 பேருக்கு போட்டியிட தடை விதிக்கப்பட்டது. அதில் எதிர்க்கட்சி பிரமுகர் லியுபோவ் சோபோவும் ஒருவர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெருமளவில் போராட்டங்கள் நடைபெற்றன.

இந்நிலையில், மாஸ்கோ சட்டமன்றத் தேர்தலில் ஆளும் யுனைடெட் ரஷியா கட்சியின் வெற்றி விகிதத்தை குறைக்கும் வகையில் அக்கட்சிக்கு எதிராக வாக்குகளிக்கும்படி லியுபோவ் சோபோவும், முக்கிய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நாவல்னியும் மக்களுக்கு கோரிக்கை வைத்திருந்தனர். தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், ஆளும் யுனைடெட் கட்சி மீண்டும் பெரும்பான்மையோடு வெற்றி பெற்றுள்ளது. எனினும், மூன்றில் ஒரு பகுதி இடத்தை அக்கட்சி இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மொத்தமுள்ள 45 இடங்களில் 28 இடங்களில் தனியாகவும் அதன் ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர்கள் 10 இடங்களிலும் வென்ற நிலையில், இந்த தேர்தலில் மொத்தம் 25 தொகுதிகளை மட்டுமே அக்கட்சி வென்றுள்ளது. ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி 13 இடங்களில் வென்றுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00