அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என கூறிவிட்டு வடகொரியா நடத்திய திடீர் ஏவுகணை சோதனை - கொரிய தீபகற்பத்தில் மீண்டும் போர்பதற்றம்

Sep 10 2019 11:51AM
எழுத்தின் அளவு: அ + அ -
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என கூறி வந்த நிலையில், வடகொரியா திடீரென ஏவுகணை சோதனையில் ஈடுபட்டுள்ளதால், இருநாட்டுக்‍கிடையே மீண்டும் மோதல் போக்‍கு நிலவி வருகிறது.

அமெரிக்காவுக்‍கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வரும் வடகொரியா, அதிபர் டிரம்ப்புடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், அவ்வப்போது ஏவுகணை சோதனையை நடத்தி மிரட்டி வருகிறது. நடப்பு மாத இறுதியில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பாக கூறி வந்த வடகொரியா, மீண்டும் ஏவுகணை சோதனையில் ஈடுபட்டுள்ளது. இன்று அதிகாலை Pyongan மாகாணத்தை நோக்கி இருமுறை ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தியதாக, தென்கொரிய தெரிவித்துள்ளது. சோதனை நடத்தப்பட்ட ஏவுகணை எந்த வகையைச் சேர்ந்தது என்று உடனடியாக விவரம் எதுவும் தெரியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியிருக்கும் தகவலை நாங்கள் அறிந்து இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. மேலும், வடகொரியாவில் நிலவும் சூழலை, நேச நாடுகளுடன் இணைந்து உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் அமெரிக்க கூறியுள்ளது. வடகொரியாவின் இந்த அதிரடி நடவடிக்‍கைகளால், அமெரிக்‍காவுடன் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைக்கு சிக்‍கல் ஏற்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00