அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக செயல்பட்டு வந்த ஜான் போல்டன் நீக்‍கம் - அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடி நடவடிக்‍கை

Sep 11 2019 11:31AM
எழுத்தின் அளவு: அ + அ -
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக செயல்பட்டு வந்த ஜான் போல்டனை அதிபர் டொனால்ட் டிரம்ப் பணிநீக்கம் செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

வெளியுறவுக் கொள்கைகள் தொடர்பாக ஜான் போல்டனுக்‍கும், அதிபர் டொனால்ட் டிரம்பிற்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்தது. இந்நிலையில், ஜான் போல்டனை பணிநீக்கம் செய்துள்ளதாக, அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது டிவிட்டர் பக்‍கத்தில் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், "தான், ஜான் போல்டனிடன் சேவை இனி வெள்ளை மாளிகைக்கு தேவையில்லை என கூறியதாகவும், அவரது ஆலோசனைகள், நிர்வாகத் திறமைகள் பலவற்றை தான் ஏற்கவில்லை - அதனால் அவரை பதவி விலகுமாறு கூறியதாகத் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து தனது ராஜினாமா கடிதத்தை போல்டன் தன்னிடம் வழங்கியதாகத் தெரிவித்துள்ள டிரம்ப், இதுவரை போல்டன் செய்த சேவைகளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும், புதிய பாதுகாப்பு ஆலோசகரின் பெயர் அடுத்த வாரம் வெளியிடப்படும் என்றும் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00