ஆர்.எஸ்.எஸ். பிடியில் இந்தியா உள்ளது - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கிளப்பும் புதிய சர்ச்சை - ஆர்.எஸ்.எஸ். குறித்து உலகம் முழுவதும் பிரச்சாரம் செய்யப்போவதாகவும் தகவல்

Sep 14 2019 12:38PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆர்.எஸ்.எஸ். இயக்‍கத்தின் பிடியில் இந்தியா இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள முசாஃபராபாத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில், அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் பேசியுள்ளார். காஷ்மீர் பிரச்னை, சர்வதேச அளவில் தற்போது பேசப்படுவதற்கு, பாகிஸ்தானே காரணம் என்றும், காஷ்மீரின் துாதுவராக உலகம் முழுவதும் செல்வேன் என்றும் இம்ரான்கான் தெரிவித்தார்.

ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பிடியில் இந்தியா இருப்பதை உலகுக்‍கு சொல்வேன் எனக்‍ கூறிய அவர், நாம் இப்போது பார்க்கும் இந்தியா, நேரு, காந்தி காலத்தில் இருந்த இந்தியா அல்ல என்று குறிப்பிட்டார். அடக்குமுறை காரணமாக, காஷ்மீர் மக்களை, இந்திய அரசு பயங்கரவாதத்துக்கு துாண்டி வருவதாகவும் இம்ரான்கான் குற்றம்சாட்டினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00