இந்தியாவுடன் போர் ஏற்பட்டால் பாகிஸ்தான் தோற்றுப் போகும் - இம்ரான் கான் பகிரங்க ஒப்புதல்

Sep 15 2019 6:06PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியாவுடன் வழக்கமான போர் ஏற்பட்டால், பாகிஸ்தான் தோற்றுப் போகும் என்பதை, அந்நாட்டு பிரதமர் திரு. இம்ரான் கான் பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார்.

அண்மையில், தொலைக்காட்சி நிறுவனத்திற்கு, பாகிஸ்தான் பிரதமர் திரு. இம்ரான் அளித்த பேட்டியில், பாகிஸ்தான் ஒருபோதும் அணு ஆயுத போரில் ஈடுபடாது என்றும், அதேசமயம், பீரங்கிகள், துப்பாக்கிகளைக் கொண்டு, வழக்கமான முறையில் இந்தியாவுடன் போர் நடைபெறும் பட்சத்தில், பாகிஸ்தான் தோற்கும் என்றும் கூறினார்.

மேலும், அணு ஆயுதங்கள் வைத்துள்ள இரண்டு நாடுகள் மோதிக் கொள்வது, அணு ஆயுத போருக்குத் தான் வழிவகுக்கும் என்றும், வழக்கமான போர் ஏற்படுவதில் இருந்து, கடவுள் எங்களை தடுத்திருக்கிறார் என்றும், பாகிஸ்தான் பிரதமர் த‌ிரு. இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

போரில் சுதந்திரத்திற்காகவே பாகிஸ்தான் ‍போராடும் எனக் கூறிய அவர், அணு ஆயுத சக்தி உள்ள நாடு மரணம் வரை போரிட்டால், அதன் பின்விளைவுகள் மோசமாக இருக்கும் என்றும் கூறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00