சவுதி அரேபியாவில் எண்ணெய் நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதன் எதிரொலி - அமெரிக்காவில் நெருக்கடிகால எண்ணெய் இருப்பை பயன்படுத்திக்கொள்ள அதிபர் டிரம்ப் அனுமதி

Sep 16 2019 11:51AM
எழுத்தின் அளவு: அ + அ -

சவுதி அரேபியாவில் உள்ள எண்ணெய் ஆலைகள் மீதான தாக்‍குதல் எதிரொலியாக, அமெரிக்‍காவில் ஏற்பட்டுள்ள பெட்ரோலிய பற்றாக்‍குறையை சமாளிக்‍க, நெருக்‍கடி கால பெட்ரோலிய இருப்பை பயன்படுத்திக்‍கொள்ள அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அனுமதித்துள்ளார்.

சவுதி அரேபியாவின் அரம்கோ புக்கியாக் மற்றும் குரைஸ் பகுதிகளில் இயங்கி வரும் இரண்டு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மீது, நேற்று முன்தினம், ஆளில்லா விமானம் மூலம் தாக்‍குதல் நடத்தப்பட்டது. இதனால் அங்கு எண்ணெய் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக சவுதி அரேபியாவில் இருந்து அமெரிக்‍காவுக்‍கான எண்ணெய் ஏற்றுமதி பாதிக்‍கப்பட்டுள்ளதால், அங்கு பெட்ரோலிய பொருட்களுக்‍கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

இதனை சமாளிக்‍கும் விதமாக, அமெரிக்‍காவில் நெருக்‍கடி காலங்களுக்‍காக இருப்பு வைக்‍கப்பட்டிருக்‍கும் பெட்ரோலியத்தை பயன்படுத்திக்‍கொள்ள அதிபர் டிரம்ப் ஒப்புதல் வழங்கியுள்ளார். இதன் மூலம் பொதுமக்‍களின் பயன்பாட்டில் பற்றாக்‍குறை ஏற்படாத வகையில், தேவையான பெட்ரோலியத்தை வழங்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

நெருக்‍கடி காலங்களில் பயன்படுத்துவதற்காக, உலகின் மிகப்பெரும் பெட்ரோலிய இருப்பு ஒன்றை, கடந்த 1970-ம் ஆண்டு அமெரிக்கா நிறுவியது. போர்க்‍காலம், இயற்கை பேரிடர்கள் போன்ற நெருக்‍கடி நேரங்களில், இந்த பெட்ரோலிய இருப்பு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00