அமெரிக்காவில் பிரதமர் மோடி மேற்கொண்டுள்ள ஒருவார கால சுற்றுப்பயணம் - முதல் கட்டமாக ஹூஸ்டன் நகரில் நடைபெற்ற எரிசக்தி நிறுவன தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்பு

Sep 22 2019 1:51PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் திரு. நரேந்திர மோடியை காஷ்மீர் பண்டிட்டுகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சந்தித்து பேசினர்.

பிரதமர் திரு.மோடி ஒருவாரகால பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். பயணத்தின் முதற்கட்டமாக, ஹூஸ்டன் நகருக்கு சென்ற அவருக்கு, சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்நாட்டின் எரிசக்தி துறை நிறுவன தலைமை செயல் அதிகாரிகளுடன், பிர‌தமர் திரு. நரேந்திர ‍மோடி ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து, அவரை, பல்வேறு அமைப்பினர் சந்தித்து பேசினர்.

முதலில், சீக்கிய அமைப்பைச் சேர்ந்‍தோர், பிரதமர் திரு.நரேந்திர மோடியை சந்தித்து பேசினர். அப்போது, மத்திய அரசு எடுத்த பல்வேறு நடவடிக்‍கைகளுக்‍கு பாராட்டு தெரிவித்ததுடன், தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை​யும் அளித்தனர். இதையடுத்து, போரா அமைப்பினர், பிரதமர் திரு. நரேந்திர மோடியை சந்தித்து பேசினர்.

பிரதமர் திரு. நரேந்திர மோடியை சந்தித்த காஷ்மீர் பண்டிட்கள், காஷ்மீர் விவகாரத்தில், மத்திய அரசு எடுத்த வரலாற்று சிறப்புமிக்க முடிவுக்கு உலக முழுவதும் உள்ள 7 லட்சம் காஷ்மீர் பண்டிட்கள் சார்பில் நன்றியை தெரிவிப்பதாகக்‍ கூறினர். இந்தியர்களின் முன்னேற்றத்திற்கு மத்திய அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஆதரவை அளிப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00