ஸ்பெயினில் தனிநாடு கோரிய தலைவர்களின் சிறை தண்டனைக்கு கடும் எதிர்ப்பு - கேட்டலோனியா போராட்டத்தில் பயங்கர வன்முறை

Oct 18 2019 12:06PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஸ்பெயின் நாட்டு முக்‍கிய தலைவர்களின் சிறை தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் பார்சிலோனாவில் நடைபெற்ற போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்தது.

ஸ்பெயின் நாட்டின் தன்னாட்சி பெற்ற மாகாணமாகத் திகழும் கேட்டலோனியாவை தனி நாடாக அங்கீகரிக்க‍ வேண்டுமென ஒரு சாரர் வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பான பொது வாக்கெடுப்பு நடத்தக்‍கோரும் தீர்மானம், கேட்டலோனியா நாடாளுமன்றத்தில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்தக்‍ கோரிக்‍கையை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தேசத்துரோக வழக்கு தொடரப்பட்டது. அதில் கேட்டலோனியா அமைச்சர்கள் உள்ளிட்ட 9 பேருக்கு, 9 முதல் 13 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதித்து ஸ்பெயின் உச்சநீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது. இதனை கண்டித்து கேட்டலோனியா மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். பார்சிலோனா நகரில் நடைபெற்ற போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்தது. சாலையில் குவிந்த நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள், சாலையில் நின்றுகொண்டிருந்த வாகனங்களுக்கு தீ வைத்தனர். மேலும் போராட்டத்தை ஒடுக்கிய, போலீசார் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி எறிந்தனர். இதனால் பெரும் பரபரப்பு உருவானது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00