சர்வதேச அளவில் முதல் முறையாக 5ஜி மொபைல் சேவை சீனாவில் அறிமுகம் - ​ஒரு கோடி பேர் முன்பதிவு

Nov 1 2019 5:01PM
எழுத்தின் அளவு: அ + அ -

சர்வதேச அளவில், முதன்முதலாக, 5ஜி தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி சீனா சாதனை படைத்துள்ளது.

ஐந்தாம் தலைமுறை மொபைல் நெட்வொர்க்கான, 5ஜி நெட்வொர்க்கை ஆவலுடன் பலரும் எதிர்பார்த்து வருகின்றனர். ஏனெனில், புதிய 5ஜி தொழில்நுட்பம், பழைய 4ஜி நெட்வொர்க்கை விட, 20 மடங்கு வேகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

5ஜி தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையில், அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் தீவிரமாக களமிறங்கி உள்ளன. ஆனால், இந்த தொழில்நுட்பத்தை முன்கூட்டியே அறிமுகப்படுத்தி, சீனா சாதனை படைத்துள்ளது.

சீனாவில் உள்ள ஷாங்காய், பெய்ஜிங், ஷென்ஜென் உள்ளிட்ட 50 நகரங்களில், 5ஜி நெட்வொர்க் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இந்த சேவைக்கு, மாதத்திற்கு, இந்திய ரூபாய் மதிப்பில், ஆயிரத்து 300 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

இதுவரை ஒரு ‍‍கோடி பேர் இதற்காக முன்பதிவு செய்துள்ளனர். 2020-ம் ஆண்டில் தான் 5ஜி தொழில்நுட்பம் அறிமுகமாகும் என்று எதிர்பார்த்த நிலையில், மற்ற நாடுகளில் செயல்பாட்டுக்கு வருவதற்கு முன்னதாகவே சீனா அறிமுகப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00