பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான்கானின் நடவடிக்கையால் பொருளாதாரம் சரிந்துவிட்டதாக புகார் - ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டம்

Nov 2 2019 12:20PM
எழுத்தின் அளவு: அ + அ -

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பதவி விலகக்கோரி, தலைநகர் இஸ்லாமாபாத்தில் மாபெரும் பேரணி நடைபெற்றது. இம்ரான்கான் இன்னும் 2 நாட்களில் பதவிவிலக வேண்டும் என போராட்டக்காரர்கள் கெடு விதித்துள்ளனர்.

கடந்த 2018ம் ஆண்டு தேர்தலில் தில்லுமுல்லு செய்து இம்ரான் வெற்றி பெற்றதாகவும், ஆதலால் பதவியை அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், அந்நாட்டின் ஜமியாத்-உலமா-இ-இஸ்லாம்-பஸல் அமைப்பு வலியுறுத்தி வருகிறது. இதற்கு, பாகிஸ்தான் மக்கள் கட்சி, நவாஸ் ஷெரீஃபின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளன.

இம்ரான் கான் பதவி விலக வலியுறுத்தி, இக்‍கட்சிகள், தலைநகர் இஸ்லாமாபாத்தை முற்றுகையிட்டு மாபெரும் பேரணி நடத்தின. இம்ரான்கான் பதவியிலிருந்தால் பாகிஸ்தானே இல்லாமல் போய்விடும் என்றும், பாகிஸ்தானின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்‍கப்பட்டதற்கு இம்ரானே காரணம் என்றும், பேரணியில், கோஷங்கள் எழுப்பப்பட்டன. இம்ரான்கான் இன்னும் 2 நாட்களில் பதவிவிலக வேண்டும் என போராட்டக்காரர்கள் கெடு விதித்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00