நாசா அனுப்பிய வாயேஜர் - 2 விண்கலம் சூரிய குடும்பத்தை கடந்து 'இன்டர்ஸ்டெல்லார்' என்ற பகுதிக்கு சென்றுள்ளதாக தகவல்

Nov 6 2019 5:22PM
எழுத்தின் அளவு: அ + அ -

சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆய்வு செய்வதற்காக, நாசா அனுப்பிய, வாயேஜர் - 2 விண்கலம், சூரிய குடும்பத்தை கடந்து, தற்போது 'இன்டர்ஸ்டெல்லார்' என்ற பகுதிக்கு சென்றுள்ளது.

சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆய்வு செய்ய, 1977-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20-ம் தேதி, வாயேஜர் - 2 விண்கலத்தை, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான, நாசா அனுப்பியது. இந்த விண்கலம், ஆயிரத்து 800 கோடி கிலோ மீட்டர் தூரம் பயணித்ததுடன், தற்போது, சூரியக் குடும்பத்தை கடந்து, 'இன்டர்ஸ்டெல்லார்' பகுதியில் பயணித்து வருகிறது.

'இன்டர்ஸ்டெல்லார்' என்பது, நட்சத்திரங்களுக்கு இடையிலான அண்டவெளி பகுதி. இந்த பகுதியில், அண்டவெளி கதிர்வீச்சு, நட்சத்திர தூசு, அணு, அயனி மற்றும் மூலக்கூறு வடிவிலான வாயுக்கள் நிறைந்திருக்கும். இந்த விண்கலம், சூரியக் குடும்பத்தில் உள்ள வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய கிரகங்களை கடந்து சென்ற முதல் விண்கலம் என்ற பெயரை பெற்றுள்ளது.

அதே சமயம், 'இன்டர்ஸ்டெல்லார்' பகுதியை கடந்து சென்ற இரண்டாவது விண்கலம் இது. இதற்கு முன்னர், 1977-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ம் தேதி நாசா அனுப்பிய வாயேஜர் - 1 விண்கலம், 2012-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி முதன்முறையாக 'இன்டர்ஸ்டெல்லார்' பகுதியை அடைந்தது. வாயேஜர் - 2 விண்கலம், பூமிக்கு தகவல் அனுப்ப சராசரியாக, 16 மணி நேரம் 40 நிமிடங்கள் எடுத்து கொள்கிறது என்றும், இந்த விண்கலம், 'இன்டர்ஸ்டெல்லார்' பகுதியில் சூரியனின் தாக்கம் குறித்த ஆய்வுகளையும் மேற்கொள்ள உள்ளதாகவும் நாசா தெரிவித்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00