பருவநிலை மாற்றம், வெப்பநிலை உயர்வு : தண்ணீர் பற்றாக்குறை பிரச்னையாக உருவெடுக்கிறது எகிப்து

Nov 7 2019 11:41AM
எழுத்தின் அளவு: அ + அ -

பருவநிலை மாற்றம் மற்றும் வெப்பநிலை உயர்வு காரணமாக, எகிப்தில், தண்ணீர் பற்றாக்குறை மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது.

உலகின் மிக நீளமான நதியான நைல் நதியை, எகிப்து, எத்தியோப்பியா மற்றும் சூடான் ஆகிய நாடுகள் பகிர்ந்து கொள்கின்றன. நைல் நதி வற்ற தொடங்கியுள்ளதால், ஏற்கனவே பாதிப்பை சந்தித்து வரும் எகிப்து, நைல் நதியில் குறுக்கே அணை கட்டும் எத்தியோப்பியாவின் முடிவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த அணை கட்டப்பட்டால், எகித்தில் தண்ணீர் பஞ்சம் மேலும் அதிகரிக்கக்கூடும். நைல் நதி பகிர்வு தொடர்பாகவும், புதிய அணை கட்டும் எத்தியோப்பியாவின் முடிவு குறித்தும், 3 நாடுகளின் தலைவர்களும் பங்கேற்று அமெரிக்காவின் வாஷிங்டனில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். சராசரியாக ஒரு நபருக்கு ஆண்டு முழுவதும் 1000 கன மீட்டர் தண்ணீர் தேவைப்படும் நிலையில், எகிப்து மக்களுக்கு தற்போது 570 கன மீட்டர் தண்ணீரே கிடைக்கிறது. 2025-ம் ஆண்டு இந்த அளவு 500 கன மீட்டராக குறையுமென எதிர்பார்க்கப்படுகிறது. வறட்சி காரணமாக, எகிப்தின் உணவு உற்பத்தி வரும் 2040-ம் ஆண்டில் 30% குறையுமென ஐ.நா. சபை ஏற்கெனவே எச்சரித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00