ஈரானில் பிரம்மாண்டமான புதிய எண்ணெய் வயல் கண்டுபிடிப்பு : அதிபர் ஹசன் ரூஹானி அறிவிப்பு

Nov 11 2019 11:08AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஈரான் நாட்டில், 5 ஆயிரம் கோடி பேரல்கள் அளவுக்கு வளம் கொண்ட, புதிய எண்ணெய் வயல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, அந்நாட்டு அதிபர் ஹசன் ரூஹானி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் பொருளாதார தடைகளால், ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உலகளவில் கச்சா எண்ணெய் உற்பத்தியில், முன்னணியில் உள்ள ஈரானுக்கு ஏற்பட்டிருக்கும் சரிவால், சவுதி அரேபியாவுக்கு கிராக்கி கூடியுள்ளது.

இந்நிலையில், ஈரானின் தென்மேற்கு பகுதியில் உள்ள குசேஸ்தான் மாகாணத்தில், 2 ஆயிரத்து 400 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில், சுமார் 5 ஆயிரத்து 300 கோடி பீப்பாய் கச்சா எண்ணையுடன், புதிய எண்ணெய் வயல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, அந்நாட்டின் அதிபர் ஹசன் ரூஹானி தெரிவித்துள்ளார். 80 மீட்டர் ஆழத்தில் கச்சா எண்ணெய் சுரக்கும் இந்த பெட்ரோல் வயல் தொடர்பான கண்டுபிடிப்பை ஈரான் மக்களுக்கு அரசு அளிக்கும் பரிசு எனவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00