இந்தியாவின் நலன்களுக்கு எதிராக இலங்கை செயல்படாது - நடுநிலையுடன் பணியாற்றவே விரும்புவதாக அதிபர் கோத்தபய ராஜபக்சே உறுதி

Nov 26 2019 12:43PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியாவின் நலன்களுக்கு எதிராக இலங்கை செயல்படாது என அந்நாட்டின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்சே குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் புதிய அதிபராக பதவி ஏற்றுள்ள கோத்தபய ராஜபக்சே சீனாவின் ஆதரவாளர் என கூறப்பட்டு வருகிறது. அவர் தனது முதல் வெளிநாட்டு பயணமாக வருகிற 29-ந் தேதி இந்தியா வருகிறார். இந்நிலையில், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர், நட்பு நாடு என்ற வகையில் நாங்கள் இந்தியாவுடன் இணைந்து பணியாற்றுவோம் என்று தெரிவித்துள்ளார். இந்தியாவின் நலனுக்கு எதிராக அமையும் எதையும் செய்யமாட்டோம் என்று கூறிய அவர், நாங்கள் நடுநிலையான நாடாகவே இருக்க விரும்புகிறோம் என்றார். வல்லரசுகளின் அதிகாரப் போராட்டங்களுக்கு இடையில் செல்ல தாங்கள் விரும்பவில்லை எனவும் கோத்தபய ராஜபக்சே கூறினார். இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் எந்த நடவடிக்கையிலும் நாங்கள் ஈடுபடமாட்டோம் என்று அவர் குறிப்பிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00