23ம் புலிகேசி பாணியில் வெளியான அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் புகைப்படம் - ஹாலிவுட் நடிகருடன் இணைத்து வைரலாகும் மாஃபிங் காட்சிகள்
Nov 28 2019 5:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தனது புகைப்படத்தை, ஹாலிவுட் நடிகர் சில்வெஸ்டர் ஸ்டாலனின் புகைப்படத்துடன் போட்டோஷாப் செய்து வெளியிட்டுள்ளதை சமூக வலைதளங்களில் பலரும் கேலி செய்து வருகின்றனர். ராக்கி, ராம்போ உள்பட ஏராளமான ஹாலிவுட் படங்களில் நடித்து பிரபலம் ஆனவர் சில்வர்ஸ்டார் ஸ்டாலன். ராக்கி படத்தில், குத்துச்சண்டை வீரர் போன்று சில்வெஸ்டர் ஸ்டாலன் தோன்றும் புகைப்படத்தில், தனது முகத்தை போட்டோஷாப் செய்து, ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தனது உடல்நிலை குறித்து வெளியான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே, ட்ரம்ப் இந்த புகைப்படத்தை பதிவிட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.