மயிலாடுதுறையில், கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி மாமனார் வீட்டு திண்ணையில் குடியேறிய பெண் - கிராம மக்கள் ஆதரவுடன், பூட்டை உடைத்து வீட்டிற்குள் குடியேறிய சம்பவத்தால் பரபரப்பு

Sep 23 2022 1:02PM
எழுத்தின் அளவு: அ + அ -

மயிலாடுதுறையில், கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி மாமனார் வீட்டு திண்ணையில் குடியேறிய பெண், கிராம மக்கள் ஆதரவுடன், பூட்டை உடைத்து வீட்டிற்குள் குடியேறிய சம்பவத்தால், பரபரப்பு ஏற்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் மன்னம்பந்தல் தெற்குவெளி தெருவை சேர்ந்த நடராஜன் என்பவருக்கும், திருவாரூர் மாவட்டம் பில்லூரை சேர்ந்த பிரவீனா என்பவருக்கும் கடந்த 2021ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. 25 சவரன் நகை, இருசக்கர வாகனம், 3 லட்ச ரூபாய் செலவில் சீர்வரிசை பொருட்களை வழங்கி பெண் வீட்டார், திருமணம் செய்து வைத்தனர். 3 மாதங்கள் இருவரும் சேர்ந்து வாழ்ந்த நிலையில், மேலும் வரதட்சணை கேட்டு, பிரவீனாவிற்கு நெருக்கடி கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

வெளியூருக்கு வேலை தேடி செல்வதாக சென்ற நடராஜன், பல மாதங்கள் ஆகியும் வீடு திரும்பவில்லை. மாமனார் வீட்டில் வசித்து வந்த பிரவீனாவிற்கு, கணவரின் சகோதரர், பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்ததால், மாமனார் ராஜேந்திரன் மற்றும் மாமியார் வசந்தா ஆகியோர், பிரவீனாவை வீட்டை விட்டு வெளியேற்றினர். ஆனால், கணவரை கண்டுபிடிக்க வேண்டும் என்றும், கணவருடன் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்தும், மாமனார் வீட்டு திண்ணையிலேயே கடந்த சில தினங்களாக அவர் தங்கி இருந்தார். இந்நிலையில், வீட்டை பூட்டிவிட்டு மாமனார் குடும்பத்தினர் வெளியே சென்றுவிட்ட நிலையில், அங்கு திரண்ட கிராம மக்களின் ஆதரவுடன், கடப்பாரையால் பூட்டை உடைத்து, வீட்டிற்குள் பிரவீனா குடியேறினார். இந்த சம்பவத்தால் மன்னம்பந்தல் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00