முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகழுக்கும், நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில், கருத்து வெளியிட்ட விவகாரம் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் மீது முதலமைச்சர் சார்பில் அவதூறு வழக்கு

Jul 25 2014 2:38PM
எழுத்தின் அளவு: அ + அ -

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் புகழுக்கும், நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில், கருத்து வெளியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் மீது, முதலமைச்சர் சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், சென்னை முதன்மை மாநகர அரசு வழக்கறிஞர் திரு. எம்.எல். ஜெகன், இன்று மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், கடந்த 22-ம் தேதி வெளியான ஆங்கில நாளிதழ் ஒன்றில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், உண்மைக்கு மாறாக உள்நோக்கத்துடன் ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார். அவதூறு பரப்பும் வகையில் தெரிவிக்கப்பட்ட இந்த கருத்து, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதையடுத்து, திரு. ஜி. ராமகிருஷ்ணனை, கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும் என அம்மனுவில் கோரப்பட்டுள்ளது. இதேபோல், அமைச்சர் திரு. செந்தில்பாலாஜி சார்பில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், தினமலர் நாளிதழ் மீது 2 அவதூறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இது தொடர்பாக, சென்னை முதன்மை மாநகர அரசு வழக்கறிஞர் திரு. எம்.எல். ஜெகன், இன்று மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், கடந்த மாதம் 22-ம் தேதி மற்றும் கடந்த 2-ம் தேதி ஆகிய இரு நாட்களில் வெளியான செய்தி, உண்மைக்கு மாறாக அவதூறு பரப்பும் வகையில் உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்டிருந்தது. இந்தச் செய்தி, தமிழக அரசுக்கும், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் அமைந்ததைத் தொடர்ந்து, தினமலர் ஆசிரியர் ஆர். கிருஷ்ணமூர்த்தி, பதிப்பாளர் ஆர். லட்சுமிபதி ஆகியோரை கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00