மீன்பிடித் தொழிலுக்காக சவுதி அரேபியா சென்று, சித்ரவதைகளை அனுபவித்துவரும் தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 22 மீனவர்களை உடனடியாக மீட்க கோரி பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

Nov 1 2014 7:04AM
எழுத்தின் அளவு: அ + அ -

சவுதி அரேபியாவில் மீன்பிடித் தொழிலுக்காகச் சென்று, சித்ரவதைகளை அனுபவித்துவரும் தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 22 மீனவர்களையும், பத்திரமாக மீட்க உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி, பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். ஏழை மீனவர்களை தாயகம் அழைத்துவர, தூதரகம் மூலம் உடனடி நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளார்.

முதலமைச்சர் திரு. ஓ. பன்னீர்செல்வம், பிரதமர் திரு. நரேந்திர மோதிக்கு எழுதியுள்ள கடிதத்தில், கடந்த ஆண்டு சவுதிஅரேபியாவில் உள்ள மீன்பிடி நிறுவனம் ஒன்றுக்கு, முகவர் மூலம் பணிக்குச் சென்ற 22 மீனவர்களின் பரிதாபநிலை குறித்து பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். சவுதிஅரேபியாவில் Jubail என்ற இடத்தில் உள்ள அந்நிறுவனத்திற்காக, நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 12 மீனவர்களும், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரும், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேரும் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர் - இவர்கள் தவிர, எஞ்சியுள்ள 6 பேரும் புதுச்சேரி மாநிலம் காரைக்காலைச் சேர்ந்தவர்கள் என்று முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மீனவர்கள் 22 பேரையும் மிகக் கடுமையாக பணியாற்ற அந்த நிறுவனம் உத்தரவிட்டதுடன், அவர்கள் உடல் ரீதியாக சித்ரவதை செய்யப்படுவதாகவும் தெரியவந்துள்ளது - மேலும், அந்த மீனவர்கள், தங்களது இன்னல்களை தாங்கிக்கொள்ள முடியாமல், மீண்டும் இந்தியா திரும்பிவர அனுமதிக்குமாறு கேட்டுக்கொண்டதற்கு சவுதி அரேபிய நிறுவனம் செவிசாய்க்க மறுத்துவிட்டது - ஒப்பந்தத்தின்படி மீனவர்களுக்கு உரிய ஊதியத்தையும் அந்நிறுவனம் வழங்கவில்லை - சவுதிஅரேபியாவில் துயரத்தில் வாடும் அந்த ஏழை மீனவர்களின் நிலை குறித்து அறிந்த அவர்களின் குடும்பத்தினர், மீனவர்களை இந்தியாவுக்கு பத்திரமாக அழைத்துவர தமிழக அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, இந்த விவகாரத்தில் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு, மீனவர்கள் 22 பேரும் நலமுடன் இருப்பதை உறுதிசெய்வதுடன், சவுதி அரேபியாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளை தொடர்புகொண்டு, அவர்களை மீட்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க பிரதமர் உத்தரவிடவேண்டும் என கேட்டுக்கொள்வதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். ஏழை மீனவர்களுக்கு, அவர்கள் பணியாற்றும் நிறுவனம் தரவேண்டிய சம்பள பாக்கித்தொகையை உடனடியாக வழங்க ஏற்பாடு செய்வதுடன், மீனவர்கள் 22 பேரும் பத்திரமாக தாயகம் திரும்ப அனைத்து உதவிகளையும் வழங்கவும், அந்நாட்டில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுக்கு உடனடியாக உத்தரவிட்டு, நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் முதலமைச்சர் திரு. பன்னீர்செல்வம், பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00