ஆண்டில் 12,000 பேருக்கு விலையில்லா கறவை மாடுகளும், ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு விலையில்லா ஆடுகளும் வழங்குவது குறித்து சென்னையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது

Oct 30 2014 10:56AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆண்டில் 12,000 பேருக்கு விலையில்லா கறவை மாடுகளும், ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு விலையில்லா ஆடுகளும் வழங்குவது குறித்து சென்னை இன்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

மக்களின் முதல்வர் செல்வி ஜெயலலிதா செயல்படுத்தி வரும் விலையில்லா கறவை பசுக்கள் மற்றும் வெள்ளாடுகள், செம்மறியாடுகள் வழங்கும் திட்டம் குறித்த ஆய்வு கூட்டம் சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் நடைபெற்றது. கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திரு.டி.கே.எம்.சின்னையா தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில், 2014-15ம் ஆண்டில் 12 ஆயிரம் பயனாளிகளுக்கு விலையில்லா கறவைப் பசுக்கள், ஒரு லட்சத்து 50 ஆயிரம் பயனாளிகளுக்கு விலையில்லா வெள்ளாடுகள் வழங்குவதற்கான இலக்கை எட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். மேலும், அனைத்து கால்நடைகளுக்கும் கடந்த செப்டம்பர் மாதம் 100 சதவீதம் கோமாரி தடுப்பூசி போடப்பட்டதற்கு அமைச்சர் பாராட்டு தெரிவித்தார். இந்தக் கூட்டத்தில், கால்நடை பராமரிப்புத்துறை செயலர் திரு.எஸ் விஜயகுமார், இயக்குநர் திரு.த.ஆபிரகாம் மற்றும் கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணி துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00